|
இதனுள் இணை அளபெடை முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே
வந்தவாறு கண்டுகொள்க.’
அளபெடைக்கு இலக்கணம் பிறரும் சொன்னார். என்னை?
‘அளபெடைத் தொடைக்கே அளபெடை யாகும்.’
என்றார் பல்காயனார்.
‘அளபெடைத் தொடைக்கே அளபெடை ஒன்றும்.’
என்றார் நற்றத்தனார்.
‘அளபெழின் மாறல தொடுப்பதை அளபெடை’
என்றார் அவிநயனார்.
‘சொல்லிசை அளபெழ நிற்பதை அளபெடை’
என்றார் சிறுகாக்கைபாடினியார்.
‘அளபெழுந் தியாப்பினஃ தளபெடைத் தொடையே.’
என்றார் உயரும்புரம் நகரச் செற்றவன்1 பெயர் மகிழ்ந்த பேராசிரியர்.1
[கட்டளைக் கலித்துறை]
‘எழுவாய் எழுத்தொன்றின் மோனை; இறுதி இயைபிரண்டாம்
வழுவா எழுத்தொன்றின் மாதே! எதுகை; மறுதலைத்த
மொழியான் வரினும் முரண்; அடி தோறும் முதன்மொழிக்கண்
அழியா தளபெடுத் தொன்றுவ தாகும் அளபெடையே.’2
‘மாவும்புள் மோனை; இயைபின் னகை;வடி யேரெதுகைக்
கேவின் முரணும் இருள்பரந் தீண்டன பாஅவளிய
ஓவிலந் தாதி உலகுட னாம்;ஒக்க மேயிரட்டை;
பாவருஞ் செந்தொடை பூத்தவென்றாரும் பணிமொழியே!’3
இவற்றைப் பதம் நெகிழ்த்து உரைத்துக்கொள்க.
1 மயேச்சுரர். 2. யா. கா. 76. 3. யா. கா. 18.
பி - ம்.1உயரும்பர்நகர்ச்செற்றவன்
|