பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              179

42) இணைத் தொடை

     இருசீர் மிசைவரத் தொடுப்பது இணையே.

     மோனை முதலாகிய ஐந்து தொடையும் உணர்த்தி, அவற்றின் விகற் பமும் உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள் இச்சூத்திரம் ‘இணை’ ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : முதல் இருசீர்க்கண்ணும், மேல் அடிக்கண் வரத் தொடுத்தாற்போல், மோனை முதலாயின வரத் தொடுத்தால், அவை ‘இணை மோனை, இணை எதுகை, இணை முரண், இணை இயைபு, இணை அளபெடை எனப்படும் (என்றவாறு).

     பிறரும்,

     ‘இரண்டாம் சீர்வரின் இணையெனப் படுமே.’

 என்றார் ஆகலின்.

     அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

[நேரிசை ஆசிரியப்பா]

     தண்ணறுந் தகரம் நீவிய கூந்தல்
     தாதார் தண்போ தட்டுபு முடித்த 1
     தயங்குமணித் தளர்நடைப் புதல்வர2 தாயொடும்
     தம்மனைத் தமரொடும் கெழீஇத்
     தனிநிலைத் தலைமையொடு பெருங்குறை வின்றே.’

 இது முதல் இருசீர்க்கண்ணும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், இணை மோனை.

[இன்னிசை வெண்பா]

     ‘கல்லிவர் முல்லைக் கணவண்டு5 வாய்திறப்பப்
     பல்கதிரோன் செல்லும் பகல்நீங் கிருள்மாலை
     மெல்லியலாய்! மெல்லப் படர்ந்த திதுவன்றோ
     சொல்லியலார்3 சொல்லிய போழ்து?’

 இது முதல் இரு சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத் தமையால், இணை எதுகை.


  பி - ம்.1 முடித்துத். 2 புதல்வர். 5 களிவண்டு 3 சொல்லியார்.