பக்கம் எண் :
 

 180                                   யாப்பருங்கல விருத்தி

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘கருங்கால் வெண்குருகு கனைதுயில் மடியும்
     இடுகுதுறை அகன்கழி இனமீன் மாந்தி
     ஓங்கிருங் குனிகோட் டிருஞ்சினை1 உறையும்
     தண்டுறை வெஞ்செலல் மான்றேர்ச் சேர்ப்பன்
     பகல்கழீஇ எவ்வம் தீரக்
     கங்குல் யாமத்து வந்துநின் றனனே.’

 இது முதல் இரு சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையால், இணை முரண்.

[நேரிசை வெண்பா]

     பிரிந்துறை வாழ்க்கையை யாமும் பிரிதும்
     இருந்தெய்க்கும் நெஞ்சே! புகழும்2 - பொருந்தும்5
     பெரும்பணைத் தோளி குணனும் மடலும்
     அருஞ்சுரத் துள்ளும் வரும்.

 இது கடை இரு சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வந்தமையால், இணை இயைபு.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘உலாஅ உலாஅ தொருவழிப் படாஅ
     எலாஅ! எலாஅ! என்றிது வினவவும்
     வெரீஇ வெரீஇ வந்தீஇ 3
     ஒரீஇ ஒரீஇ ஊரலர் எழவே.’

 இது முதல் இரு சீர்க்கண்ணும் அளபெடுத்தமையால், இணை அளபெடை.

     ‘அஃதே எனின், இணை முதலாகிய தொடை விகற்பங் கட்கு இலக்கியம் ஈண்டன்றே காட்டற்பாலது? மேற்காட்டி யது என்னை? எனின், ஏழு விகற் பமும் முறையானே ஒரு செய்யுளுள்ளே வந்தது கண்டு கற்பார்க்கு எளிமை நோக்கித் தத்தம் தொடைகளோடும் இயையக் காட்டியதல்லது, இலக் கண முறைமையாவது ஈண்டுக் காட்டுவது எனக் கொள்க.


 பி - ம் 1 ஓங்கிருங் குளிர்தோட் டிருஞ்சுனை, ஓங்கிருங் குளிர்கோட் டிருஞ்சுனை, 2 இருந்து, 5 பாருளும். 3 வருதீஇ.