|
உறுப்பியல் - தொடை ஓத்து 181 |
43) பொழிப்புத் தொடை
முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே.
என்பது என் நுதலிற்றோ?’ எனின், பொழிப்பு ஆமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இதன் பொழிப்பு : முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க் கண்ணும் மோனை
முதலாயின வரத் தொடுத்தால், பொழிப்புத்தொடை எனப்படும் (என்றவாறு).
அவை பொழிப்பு மோனை, பொழிப்பு எதுகை, பொழிப்பு முரண்,
பொழிப்பு இயைபு, பொழிப்பு அளபெடை எனப்படும்
.
‘சீரிடை விட்டினி தியாப்பது பொழிப்பாம்.’
எனவும்,
‘ஒருசீர் இடைவிடிற் பொழிப்பொரூஉ இருசீர்.’
எனவும் பிறரும் சொன்னார் ஆகலின்.
வரலாறு:
[நேரிசை ஆசிரியப்பா]
‘கணங்கொள் வண்டினம் கவர்வன மொய்ப்பக்
கழிசேர் அடைகரைக் கதிர்வாய் திறந்த
கண்போல் நெய்தல் கமழும் ஆங்கட்
கலிமாப் பூண்ட கடுந்தேர்
கவ்வைசெய் தன்றாற் கங்குல் வந்தே.’
இது முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க்கண்ணும் முதலெழுத்து ஒன்றி
வந்தமையால், பொழிப்பு மோனை.
[நேரிசை ஆசிரியப்பா]
‘பல்கால் வந்து மெல்லக் கூறிச்
சொல்லல் வளமையின் இல்லவை1 உணர்த்தும்2
செல்புனல் உடுத்த5 பல்பூங் கழனி
நல்வயல் ஊரன் வல்லன்
ஒல்கா துணர்த்தும்ா பல்குறை மொழியே.’
பி - ம். 1நல்லவை, 2எடுத்த. 5புணர்த்தும் 3ஒல்லானுணர்த்தும்.
|