பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              201

     ‘ஒருசீர் அடிமுழு தாயின் இரட்டை’.

 என்றார் அவிநயனார்.

     ‘ஒருசீர் அடிமுழுதும் வருவ திரட்டை’.

 என்றார் மயேச்சுரர்.

     ‘அடிமுழு தொருசீர் வரினஃ திரட்டை’.

 என்றார் பரிமாணனார்.

     அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]

     ‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
     விளக்கினிற் சீரெரி ஒக்குமே ஒக்கும்
     குளக்கொட்டிப் பூவின் நிறம்’1.

 எனவும்

[இன்னிசை வெண்பா]

     ‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
     பாவீற் றிருந்த புலவீர்காள்! பாடுகோ
     ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார்
     கோவீற் றிருந்தான் கொடை’12

 எனவும்,

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]

     ‘நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே
     செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணும் சால்பினும்
     மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார்’.

 எனவும் இரட்டைத் தொடை ஆமாறு கண்டு கொள்க.

     ‘இரட்டை, அடி முழுதும் ஒரு சீர்த்து’ என்னாது, ‘ஒருசீர் இயற்றே’
 என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

[குறள் வெண்பா]

     ‘குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது
     கருப்புச் செறுப்புப் பரப்பு’

 எனவும்


  1. யா. வி. 53 உரைமேற். 2. நேமிநாதம். பக் 30.

  பி - ம். 1 குடை.