|
[நேரிசை ஆசிரியப்பா]
‘இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்
புலாஅன்1 மறுகிற் சிறுகுடிப் பாக்கத்
தினமீன் வேட்டுவர் ஞாழலொடு மலையும்?
மெல்லம் புலம்ப! நெகிழ்ந்தன தோளே;
5. சேயிறா முகந்த நுரைபிதிர்ப் படுதிரைப்
பராஅரைப் புன்னை வாங்குசினைத் தொடுத்த
கானலம் பெருந்துறை நோக்கி இவளை
கொய்சுவற் புரவிக் கைவண் கோமான்
நற்றேர்க் குட்டுவன் கழுமலத் தன்ன
10. அம்மா மேனி தொன்னலம் சிதையத்
துஞ்சாக் கண்ணன் அலமரும்; நீயே
கடவுள் மராத்த முண்மிடை குடம்பைச்
சேவலொடு வதியும் சிறுகரும் பேடை
இன்னா துயவும் கங்குலும்
15. நும்மூர் உள்ளுவை; நோகோ யானே.’1
எனவும் செந்தொடை வந்தவாறு. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
51) இரட்டைத் தொடை
இரட்டை அடிமுழு தொருசீர் இயற்றே.
‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், இரட்டைத் தொடை ஆமாறு உணர்த்
துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : ஓர் அடி முடியும் அளவும் ஒரே சீரே நடப்பது
இரட்டைத் தொடை (என்றவாறு)
என்னை?
‘முழுவதும் ஒன்றின் இரட்டை யாகும்’.
என்றார் பல்காயனார்.
‘சீர்முழு தொன்றின் இரட்டை யாகும்’.
என்றார் நற்றத்தனார்.
1 அகம் 270. பி - ம் 1 ஊன்புலாஅன் ? மிலையும்.
|