|
உறுப்பியல் - தொடை ஓத்து 199 |
நேரசைக்கு நேரசையே வரினும் நான்கு நேரசையும் வரினும் நான்கு
நிரையசையும் தம்முள் ஒவ்வாதே வந்தும், இயற் சீருக்கு உரிச்சீரே வந்தும்
உரிச்சீருக்கு இயற்சீரே வந்தும், இயற்சீருக்கு இயற்சீரே வரினும் தம்முள்
ஒவ்வாது வந்தும், உரிச்சீருக்கு உரிச்சீரே வரினும் தம்முள் ஒவ்வாது வந்தும்,
ஓரடி ஒரு வண்ணத்தால் வந்து மற்றையடி மற்றொரு வண்ணத்தால் வந்தும்,
அசை சீர் இசை என்னும் மூன்றும் ஒவ்வாது வந்தும், அனுவும் இனமும்
இன்றி முரணாக் கிடப்பது செந்தொடை என்றவாறு. என்னை?
‘அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையா தாவது செந்தொடை தானே’
என்றார் பல்காயனார்
‘ஒன்றா தாவது செந்தொடைக் கியல்பே’
என்றார் நற்றத்தனார்.
‘செம்பகை யல்லா1மரபினதாம் தம்முள்
ஒன்றா நிலையது செந்தொடை யாகும்’
என்றார் காக்கைபாடினியார்.
‘மாறல தொவ்வா மரபின செந்தொடை’
என்றார் அவிநயனார்.
அவற்றை அசை விரளச் செந்தொடை, சீர் விரளச் செந்தொடை, இசை
விரளச் செந்தொடை, முழு விரளச் செந்தொடை எனப் பெயரிட்டு வழங்கு
வாரும் உளரெனக் கொள்க. அவற்றுட் சில வருமாறு:
[நேரிசை ஆசிரியப்பா]
‘பூத்த வேங்கை வியன்சினை ஏறி
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே’1
எனவும்,
1 தமிழ் நெறி. பொருள். 17 மேற்.
பி - ம்.1இல்லா
|