|
தொறும் பொருள் அற்று மண்டிலமாய் வருவன ‘அடிமறி மண்டில
வெளி விருத்தம்’ என்றும், அல்லாதன ‘நிலை வெளி விருத்தம்’ என்றும்
வழங்கப்படும் எனக் கொள்க.
அவற்றிற்குச் செய்யுள் வருமாறு :
[அடி மறி மண்டில வெளி விருத்தம்]
‘சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்;
புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்;
கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல் - எஞ்ஞான்றும்;
நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும்’.
எனவும்,
‘ஆவா! - என்றே அஞ்சினர் ஆழா1 - ஒருசாரார்;
கூகூ! என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்;
மாமா! என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்;
ஏகிர் நாய்கீர்!? என்செய்தும்! என்றார் - ஒருசாரார்’.
எனவும்,
‘மாலை மணங்கமழும் மௌவல்
முகைவிரியும் - எந்தைகுன்றம்;
காலை மணிக்குவளை காதலர்போற்
கண்விழிக்கும் - எந்தைகுன்றம்;
நீல மழைமுழங்கி நின்று சிலம்பதிரும் - எந்தைகுன்றம்;
ஆலி4 மயிலகவ அந்தண் டுவனமே5 - எந்தைகுன்றம் ’.
எனவும் இவை நான்கு அடியாய், அடிதோறும் பொருள் அற்று,
அடிமறியாய் வந்தமையால், அடிமறி மண்டில வெளி விருத்தம்.
[நிலை வெளி விருத்தம்]
‘சேயரி நாட்டமும் செவ்வாயும் அல்குலுமோ - அம்மானாய்!
ஆய்மலரும் தொண்டையும் ஆழியந்
திண்டேரும் - அம்மானாய்!
மாயிருந் தானை மயிடன் றலையின்மேல் - அம்மானாய்!
பாயின சீறடிப் பாவை பகவதிக்கே - அம்மானாய்!
இஃது அடிமறியாய் வாராமையின், நிலைவெளி விருத்தம்.
1. யா. வி. 67
பி - ம். 1 ஆழ்ந்தார் ? நாகீர்ா மாலை 5 வந்தண்டுவணமே
வந்தன்று வானமே.
|