பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         275

     ‘பெற்றவடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய்
     இற்ற அடியும் ஈற்றயல் அடியும்
     ஒன்றும் இரண்டும் நின்ற தனசீர1
     கண்டன குறையின் வெண்டுறை யாகும்’.

 என்றார் மயேச்சுரர்.

     ‘ஐந்தா றடியின் நடந்தவும் அந்தடி
     ஒன்றும் இரண்டும் ஒழிசீர்ப் படுநவும்
     வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே’.

 என்றார் அவிநயனார்.

     இவர்களும் விதப்பான்? மூன்றடி முதலா ஏழடிகாறும் இவ்வாறே உடன்பட்டார் எனக் கொள்க:

68) வெளி விருத்தம்

     ‘நான்கடி யானும் நடைபெற் றடிதொறும்
     தான்றனிச் சொற்கொளின் வெளிவிருத் தம்மே’,

 இச் சூத்திரம், வெளிவிருத்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள் : நான்கு அடியாலும் நடைபெற்று - நான்கு அடியால் வந்து (‘நான்கு அடியானும்’ என்ற உம்மையான், மூன்று அடியானும் அருகி வரப் பெறும் எனக் கொள்க) அடிதொறும் தான் தனிச்சொல் கொளின் வெளி விருத்தமே - அடிதொறும் இறுதிக் கண் ஒரு சொல்லே தனிச் சொல்லாய்ப் பொருள் கொண்டு முடியின் ‘வெளி விருத்தம்’ எனப்படும் (என்றவாறு).

     ‘இறுதி’ என்பது, ‘மூன்றடி முதலா ஏழடி காறும்’1 என்னும் சூத்திரத்தினின்றும் அதிகாரம் வருவித்து உரைக்கப்பட்டது.

     ‘அடிதொறும் தனிச் சொற்கொளின் வெளி விருத்தம்மே’ என்னாது, ‘தான்’ என்று மிகுத்துச் சொல்லிய அதனால், தனிச் சொல்லை அடி உட்படச் சொன்னால் இயைபுத் தொடையாம். அஃது அப்பெற்றியன்றியே வேறாய் வந்தது போலும் இங்குத் ‘தனிச் சொல்லாவது’ என்று அடியுட் படாதே பிரித்து அலகிட்டு வழங்கப்படும். அல்லாது, அடி


  பி - ம். ? அதன்சீர்1 இச் சூத்திரங்களால்