பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        349

     ‘வீங்குபிணிக்1 கயிறொரீஇத் தாங்குவனத் தொன்றப்போய்க்?
     கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப’.

[தனிச்சொல்]

எனவாங்கு.

[சுரிதகம்]

     ‘கானொடு 5புல்லிப் பெரும்பூதம் 3முனையும்
     கானுடைத் தவர்தேர் சென்ற வாறே’.1

     இது சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா.

[சுரிதகத் தரவிணைக் கொச்சகம்]

[தரவு]

     ‘வடிவுடை நெடுமுடி வானவர்க்கும்4 வெலற்கரிய
     கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாய்க11
     கொடிபடு வரைமாடக் கோழியார்? ? கோமானே!’

[தனிச்சொல்]

எனவாங்கு.

[தரவு]

     ‘துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம்
                                     துறப்புண்டாங்
     கிணைமலர்ந்தார் அருளுமேல் இதுவதற்கோர் மாறென்று
     துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ?

[தனிச்சொல்]

அதனால்,

[சுரிதகம்]

     ‘செவ்வாய்ப் பேதை இவள்திறத்
     தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே?’

     இது சிறப்புடை ஆசிரியத் தளையால் வந்த சுரிதகத் தரவிணைக்
 கொச்சகக் கலிப்பா.

     பிற தளையாலும் வந்த வழிக் கண்டு கொள்க.


  1 யா. வி. 22 உரைமேற்.
  பி - ம். 1 வீங்கு மணிக் ? தேறப் போய்க் 5 ஆனொடு
 3 பெரும்புறா 4 வானவற்கும் 11 காவலனாம்? ? மணிமாடக் கூடலார்.