பக்கம் எண் :
 

 350                                   யாப்பருங்கல விருத்தி

[இயற்சிஃறாழிசைக் கொச்சகம்]

[தரவு]

     ‘பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின்
                               மிசைத்தோன்றிக்
     குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப்
     படைப்பரிமான் றேரினோடும் பரந்துலவு மறுகினிடைக்
     கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே’.

[தனிச்சொல்]

ஆங்கொருசார்

[தாழிசை]

     ‘உச்சியார்க் கிறைவனாய் உலகமெல்லாம் காத்தளிக்கும்
     பச்சையார் மணிப்பைம்பூண் புரந்தரனாப் பாவித்தார்
     வச்சிரங்கைக் காணாத காரணத்தான் மயங்கினரே;’
                                                            1

(தனிச்சொல்)

ஆங்கொருசார்.

     ‘அக்காலம், அணிநிரைகாத் தருவரையாற் பனிதவிர்த்து
     வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார்
     சக்கரங்கைக் காணாத காரணத்தாற் சமழ்த்தனரே;’
                                                            2

(தனிச்சொல்)

ஆங்கொருசார்

     ‘மால்கொண்ட பகைதணிப்பான் மாத்தடித்து மயங்காச்செங்
     கோல்கொண்ட சேவலங் கொடியோனாப் பாவித்தார்
     வேல்கொண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே’.            3

[தனிச்சொல்]

அஃதான்று.

[சுரிதகம்]

     ‘கொடித்தேர் அண்ணல1 கொற்கைக் கோமான்
     நின்றபுகழ்? ஒருவன் செம்பூட் சேஎய்


  பி - ம்.1 தோன்றல் ? நிறைபுகழ்.