பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         351

     என்றுநனி அறிந்தனர் பலரே; தானும்
     ஐவருள் ஒருவனென் றறியல் ஆக.
     மைவரை யானை மடங்கா வென்றி
     மன்னவன் வாழியென் றேத்தத்
     தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே!’

     இஃது இடையிடை தனிச்சொல் வந்து, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிது வேறுபட்டு, தாழிசை மூன்றேயாய், தன்றளையால் வந்த இயற்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.

[குறைச்சிஃறாழிசைக் கொச்சகம்]

[தரவு]

     ‘மாயவனாய் முற்றோன்றி மணிநிரைகாத் தணிபெற்ற
     ஆயநீள் குடையினராய் அரசர்கள் பலர்கூடி
     மணிநின்ற மேனியாள் மதநகையைப் பெறுகுவார்
     அணிநின்ற விடைகொண்டார் எனச்சொல்லி அறைந்தனரே’.

[தாழிசை]

[தனிச்சொல்]

‘தானவ்வழி,

     ‘எழுப்பற்றிச் சனந்துறுமி எவ்வழியும் இயமியம்ப
     விழுக்குற்று நின்றாரும் பலர்;’

[தனிச்சொல்]

‘ஆங்கே,

     வாளுற்ற கண்ணாளை மகிழ்விப்பாம் எனக்கருதிக்
     கோளுற்று நின்றாரும் பலர்;’

[தனிச்சொல்]

‘ஆண்டே,

     ‘இத்திறத்தாற் குறையென்னை இருங்கிளைக்கும் கேடென்னப்
     பற்றாது நின்றாரும் பலர்’.

[தனிச்சொல்]

‘அதுகண்டு,

[சுரிதகம்]

     ‘மைவரை நிறத்துத்தன்1 மாலை இயறாழக்
     கைவரை நில்லாது கடிதேற் றெருத்தொடிப்ப


  பி-ம். 1 நிறத்தன்