|
அழுங்கினர் ஆயம் அமர்ந்தது சுற்றம்
எழுந்தது பல்சனம் ஏறுதொழு விட்டன
கோல வரிவளை தானும்
காலன்1 போலும் கடிமகிழ் வோர்க்கே!’
இஃது இடையிடை தனிச்சொல் வந்து, ஈற்றடி குறைந்து வந்த மூன்று
தாழிசை பெற்று வந்தமையால், குறைச்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா,
சிறப்பில் வெண்டளையால் வந்து, நாலடித்தரவாகி, இரண்டடித்
தாழிசையாலும் ஆறடிச் சுரிதகத்தாலும் வந்தது எனக் கொள்க.
பிற தளையாலும் வந்த வழிக் கண்டு கொள்க.
[இயற்பஃறாழிசைக் கொச்சகம்]
[தரவு]
‘தண்மதியேர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங்
குண்மதியும் உடனிறையும் உடன்றளர முன்னாட்கண்
கண்மதியோர்ப் பிவையின்றிக் காரிகையின் நிறைகவர்ந்து
பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ?
[தாழிசை]
‘இளநலம் இவள்வாட இரும்பொருட்குப் பிரிவாயேல்,
தளநல முகைவெண்பல் தாழ்குழல் தளர்வாளோ? 1
‘தகைநலம் இவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல்,
வகைநலம் இவள்வாடி வருந்தியில் இருப்பாளோ? 2
‘அணிநலம் இவள்வாட அரும்பொருட்குப் பிரிவாயேல்,
மணிநலம் மகிழ்மேனி மாசோடு மலிவாளோ? 3
‘நாம்பிரியோம் அணியென்று நறுநுதலைப் பிரிவாயேல்,
ஓம்பிரியோம் என்றநின் உயர்மொழியும் பழுதாமோ? 4
‘குன்றளித்த திரள்தோளாய்! கொய்புனத்துக் கூடியநாள்
அன்றளித்த அருண்மொழியால் அருளியதும் அருளாமோ? 5
‘சில்பகலும் ஊடியக்கால் சிலம்பொலிச்சீ றடிபரவிப்
பல்பகலும் தலையளித்த பணிமொழியும் பழுதாமோ? 6
பி - ம். 1 காலவன் ? மடிவாளோ
|