பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        353

[தனிச்சொல்]

அதனால்

[சுரிதகம்]

     ‘அரும்பெறல் இவளினும் தரும்பொருள் அதனினும்
     பெரும்பெறல் அரியன; வெறுக்கையும் அற்றே;
     விழுமிய தறிமதி அறிவாம்
     கழுமிய காதலிற் றரும்பொருள் சிறிதே’.

     இது சிறப்புடைத் தன்றளையால் நாலடித் தரவும், இரண்டடித் தாழிசை ஆறும், தனிச்சொல்லும், நாலடிச் ²¤தகமும் பெற்று வந்த இயற்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.

     குறைப்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும் வந்தவழிக் கண்டு கொள்க.

[இயல் மயங்கிசைக் கொச்சகம்]

[தரவு]

     ‘மணிகிளர் நெடுமுடி மாயவனும் தம்முனும்போன்
     றணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால்;
     நுரைநிவந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம்
     இரைநயந் திறைகூரும் ஏமஞ்சார் துறைவ! கேள்;
                                                           1
     ‘வரையென 1மழையென மஞ்செனத் திரைபொங்கிக்
     கரையெனக் கடலெனக் ? கடிதுவந் திசைப்பினும்
     விழுமியோர் வெகுளிபோல் வேலாழி இறக்கில்லா5
     தெழுமுந்நீர் பரந்தோங்கும் ஏமஞ்சார் துறைவ! கேள்;           2

[தாழிசை]

     ‘கொடிபுரையும் நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள்
     தொடிநெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால்;          1
     ‘கண்கவர் மணிப்பைம்பூண் கயில்கவைச் சிறுபுறத்தோள்
     தெண்பனிநீர் உகக்கண்டும் தெரியலனே என்றியால்;            2
     ‘நீர்பூத்த நிரையிதழ்க்கண் நின்றொசித்த புருவத்தோள்
     பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே என்றியால்;                 3


  பி - ம். 1 மலையென ? கடலெனக் காற்றெனக் 5 இறக்கல்லா