|
‘கனைவரல்யாற் றிடுகரைபோற் கைந்நில்லா துண்ணெகிழ்ந்து
நினையுமென் நிலைகண்டும் நீங்கலனே என்றியால்; 4
‘வீழ்சுடரில் நெய்யேபோல் விழுமநோய் பொறுக்கில்லா1
தாழுமென் நிலைகண்டும் அகல்கிலனே என்றியால்; 5
‘கலங்கவிழ்த்த நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப்
புலம்புமென் நிலைகண்டும் போகலனே என்றியால் 6
[தனிச்சொல்]
அதனால்
[அராகம்]
‘அடும்பயில் இறும்பிடை நெடும்பனை? மிசைதொறும்
கொடும்புற மடலிடை ஒடுங்கின குருகு; 1
‘செறிதரு செருவிடை எறிதொழில் இளையவர்
நெறிதரு புரவியின் மறிதரும் திமில்; 2
‘அரைசுடை நிரைபடை விரைசெறி முரசென
நுரைதரு திரையொடு கரைபொரும் கடல்; 3
‘அலங்கொளி விரிசுடர் 5 இலங்கெழில் மறைதொறும்ா
கலந்தெறி காலொடு புலம்பின பொழில்’. 4
[தாழிசை]
‘விடாஅது கழலுமென் வெள்வளையும் தவிர்ப்பாய்மன்;
கெடாஅது பெருகுமென் கேண்மையும் நிறுப்பாயோ? 1
‘ஒல்லாது கழலுமென் ஒளிவளையும் தவிர்ப்பாய்மன்;
நில்லாது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? 2
‘தாங்காது கழலுமென் தகைவளையும் தவிர்ப்பாய்மன்;
நீங்காது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? 3
‘மறவாத அருளுடையேன் மனநிற்கு மாறுரையாய்;
துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய் 4
‘காதலார் மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய்;
ஏதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய்; 5
‘இணைபிரிந்தார் மார்பன்றி இன்பக்கு மருந்துரையாய்;
துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய் 6
பி - ம். 1 பொறுக்கல்லா ? இறும்பி னெடும்பணை 5 அலங்கொளி
ரவிர்சுடர் 3 இலங்கொளி மலர்தோறும்
|