|
[தனிச்சொல்]
எனவாங்கு.
[அம்போதரங்கம்]
‘பகைபோன்றது துறை;1 பரிவாயின குறி;2
நகையிழந்தது முகம்;3 நனிநாணிற் றுளம்;4
தகையிழந்தது தோள்;5 தலைசிறந்தது துயர்;6
புகைபரந்தது மெய்;7 பொறையாகின்றென் உயிர்;8’
[தனிச்சொல்]
அதனால்
[சுரிதகம்]
‘இனையது நிலையால் அனையது பொழுதால்
இனையல் வாழி தோழி! துனைவரல்1
பனியொடு கழிக உண்கண்;
என்னொடு கழிகவித் துன்னிய நோயே!’
இது தரவு இரட்டியது; தாழிசை ஆறும், தனிச் சொல்லும், அராகம்
நான்கும், பெயர்த்தும் ஆறு தாழிசையும், தனிச் சொல்லும், எட்டு
அம்போதரங்க உறுப்பும், தனிச் சொல்லும், சுரிதகமும் இவ்வாறு
கலிக்கு ஓதப்பட்ட ஆறு உறுப்புமே மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும்
உறழ்ந்தும் மயங்கியும் வந்தமையால், இயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.
[அயல் மயங்கிசைக் கொச்சகம்]
[தரவு]
‘காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்
தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான்
நீணாக நறும்பைந்தார் தயங்கப்பாய்ந் தருளினாற்
பூணாகம் உறத்தழீஇப் போதந்தான் அகனகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என்றோழி
அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே;’
பி - ம். 1 தொலையாப்
|