|
[தாழிசை]
‘அவனுந்தான்,
ஏனல் இதணத் தகிற்புகை உண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத்
தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும் 1
கானக நாடன் மகன்;
‘சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே!
வள்ளிகீழ் வீழா, வரைமிசைத் தேன்றொடா,
கொல்லை குரல்வாங்கி ஈனா, மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்; 2
‘காந்தள் கடிகமழும் கண்வாங் கிருஞ்சிலம்பின்
வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வற் றொழுதெழலாற் றம்மையரும்
தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்; 3
[தனிச்சொல்]
எனவாங்கு.
‘அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்;
‘அவரும்,
தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்செந்
தொருபகல் எல்லாம் உருத்தெழுந் தாறி
இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை;
‘தெரியிழாய்! நீயுநின் கேளும் புணர
வரையுரை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇயாம் ஆடக் குரவையுட்
கொண்டு நிலைபாடிக் காண்;
‘நல்லாய்!
நன்னாட் டலைவரும் எல்லை நமர்மலைத்
தந்நாண்தாம் தாங்குவார் என்னோற் றனர்கொல்!
‘புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில்
நனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ?
நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே
|