|
களவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?
‘விண்டோய்கல் நாடனும் நீயும் வதுவையுட்
பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ?
பண்டறியா தீர்போற் படர்ந்தீர் பழங்கேண்மை
கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ?
‘மைதவழ் வெற்பன் மணவணி காணாமற்
கையாற் புதைபெறூஉம் கண்களும் கண்களோ!
என்னைமன், நின்கண்ணாற் காண்பென்மன் யான்;
நெய்தல் இதழுண்கண், நின்கண்ணா கென்கண் மன்;’
[தனிச்சொல்]
எனவாங்கு.
[சுரிதகம்]
‘நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇத்
தகைமிகு1 தொகைவகை அறியும் சான்றவர் இனமாக
வேய்புரை மென்றோட் பசலையும் அம்பலும்
மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடனீங்கச்
சேயுயர் வெற்பனும் வந்தனன்?
போதெழில்5 உண்கணும் பொலிகமா இனியே!’1
இது வெள்ளை பலவும் மயங்கி, ஆசிரிய அடியும் விரவி
வந்தமையால், அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. இதன் முதற்கண்
நேரீற்று இயற்சீர் வந்தவாறு கண்டு கொள்க.
[மயங்கிசைக் கொச்சகம்]
[தரவு]
‘நறுவேங்கைத் துறுமலர் நன்னுதலார் கொண்டணிய
உறுபாங்கர்ப் புனத்தருகர் ஒருசிறைநின் றேமாகக்
கடிகாவற் குறவர்தம் காப்பினார் கதஞ்சிறந்திட்
டிடியோடு முழக்கிற்றாய் இருங்களிறு தோன்றலும்
அஞ்செமக்கு வந்தடைய அருளினால் வேல்விடலை
வெஞ்சினத்தால் அதன்றிறல்வீழ்த் தெந்தடந்தோள்
கவைஇக் கொளப்
பொற்பின்றி முலைபொதிர்த்த என்பதனால் என்றோழி
கற்பினால் உலகினுட் கருதியதே ஆகுமே’.
1 கலி 39.
பி - ம். 1 தகைமிகை. ? புகுந்தனன் 5 பூ வெழில்.
|