|
[அராகம்]
‘அவனே,
அயன்மலைக் காவலன் காதல னாமே;
‘இவளே,
அதற்கொண்டும் பயப்பெய்தினனே;
‘யானே,
இதற்கொண்டும் பெரும்படர் எய்தினளே;
‘அதனால்,
இதுவிதன் நிலைமையெனும் அதுவிதி யுணரா
மதுவிரி மலரியள் உறுவனள் அலர்;
அலர்சிலர் பலரறி குறியுறு வகைகொடி
தனையிது மிகநொது மலர்வரை வதைகடன் நுமர்;
நுமர்தரு விதியென நுணுகிய விலகிடை
தமர்பல ருடன்மகிழ் தகையின திவடகை;
தகைபெறு குழலெழில் அழல்சுழல் பழியினள்;
பழிபடர் இடரொடு பலர்
பலதுயர் செலப்புரி
புரிதெரி விலர்தமர்;
தமர்பல தகுதியொ டெமரிவர்
தகைமிகை நவிலுத லதுவிதி.
‘இனியே,
ஆடல் நடைப்புரவிச் செம்பூட் சேஎய்
கூடலெனக் குயின்றன தோள்;
‘மறந்தரு தானைச் செங்கோற் கிள்ளி
உறந்தையிற் சிறந்தன முலை;
‘மஞ்சுவரைத் திணிதோட் பூழியர் மன்னவன்
வஞ்சியென மலர்ந்தன கண்;
‘இன்றே,
பொலிகநும் வினையே! பொலிகநும் வினையே’
நாணணி கொண்ட நன்னுதல் அரிவைக்கும்
பூணணி கொண்ட பொங்குவரை மார்பற்கும்
மனையீ ரோதி வாழ்வொடு மல்கிய
புனையீ ரோதிக்கும் பொலிகநும் வினையே!
|