|
‘இவ்வகை,
வினைசெய் மாக்களும் விரும்பினர் வாழ்த்திப்
புனைநலம் எய்தின்றிப் பதியே;
நொதுமலர்க் கறைந்தன்று1 முரசு;
கதுமெனக் கதிர்த்தது கடி;
மணமொடு 2 மகிழ்ந்தது மனை;
கண்ணொடு கழீஇயினா கிளை;’
[தனிச்சொல்]
‘அதான்று’
[சுரிதகம்]
‘முன்னாட் களவொடு பழகிப்
பின்னாட் கற்பொடு புணர்ந்தன்றால் இதுவே’.
இதுவும், பிரிந்திசைக்குறள் அடிகளும், அந்தாதித் தொடையாகிய
அராக அடிகளும், தனிச்சொற்களும் விரவி, மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும்,
உறழ்ந்தும், இவை இடையிடை ஆசிரியங்களும் வெள்ளைகளும்
மயங்கியும் வந்தமையான், மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.
பிரிந்திசைக் குறளடியாவன, இருசீர் அடியும் முச்சீர் அடியுமாய் வரும்
அம்போதரங்கம் எனக் கொள்க.
பிறரும் இவற்றுக்கு இவ்வாறே இலக்கணம் சொன்னார். என்னை?
‘தரவே யாகியும் இரட்டியும் தாழிசை
சிலவும் பலவும் மயங்கியும் பாவே
றொத்தா ழிசைக்கலிக் கொவ்வா உறுப்பின
கொச்சகக் கலிப்பா ஆகும் என்ப’.
என்றார் அவிநயனார்.
‘தரவே தரவிணை தாழிசை சிலபல
வரன்முறை பிறழ அயற்பா மயங்கியும்
தனிச்சொற் பலவாய் இடையிடை நடந்தவும்
ஒத்தா ழிசைக்கலி உறுப்பினி்ற் பிறழ்ந்தவும்
பி - ம். 1 கரைந்தன்று ? மன்னொடு 5 கெழீஇயின 3 அஃதான்று.
|