பக்கம் எண் :
 

 362                                   யாப்பருங்கல விருத்தி

[பேரெண்]

     ‘ஆருயிர்க் கெல்லாம் அமிழ்தின் றமையா
     நீரினும் இனிதுநின் அருள்;                                  1

     ‘அருளும் அலைகடலும் ஆயிரண்டும் ஒக்கும்
     இருள்கொடிமேற் கொண்டாய் நினக்கு’.                        2

[சிற்றெண்]

     ‘நீரகலம் காத்தோய்நீ; நிலவுலகம் ஈந்தோய்நீ;
     போரமர் கடந்தோய்நீ; புனையெரிமுன் வேட்டோய்நீ;
     ஒற்றைவெண் குடையோய்நீ; கொற்றச்செங் கோலோய்நீ;
     பாகையந் துறைவனீ; பரியவர் இறைவனீ’.

[தனிச்சொல்]

எனவாங்கு.

[சுரிதகம்]

     ‘பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி
     இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
     மனமகிழ்ந்
     தருள்புரி பெரும்புகழ் அச்சுதர் கோவே
     இனையை ஆதலின் பனிமதி தவழும்
     நந்தி மாமலைச் சிலம்ப
     நந்திநிற பரவுதல் நாவலர்க் கரிதே!’

 இது வண்ணக ஒரு போகு.

     பிறவும் வண்ணக உறுப்பும் பெற்று வந்த வண்ணக ஒரு போகு வந்தவழிக் கண்டு கொள்க. என்னை?

     ‘தரவின் றாகித் தாழிசை பெற்றும்,
     தாழிசை இன்றித் தரவுடைத் தாகியும்,
     எண்ணிடை யிட்டுச் சின்னம் குன்றியும்,
     அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும்,
     யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது
     கொச்சக ஒருபோ காகும் என்ப’.1

 என்றார் தொல்காப்பியனார். அவையெல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க.


  1 தொல். பொ. 461.