|
[தனிச்சொல்]
எனவாங்கு.
[சுரிதகம்]
‘பவழம் எறிதிரைப் பரதைக் கோவே!
புகழ்துறை நிறைந்த பொருவேல் நந்தி!
உலகுடன் அளந்தனை நீயே;
உலகொடு நிலவுமதி உதயவரை ஒத்தே’.
இஃது அம்போதரங்க ஒரு போகு.
பிறவும் அம்போதரங்க உறுப்புப் பெற்று வந்த அம்போதரங்க ஒரு
போகு. வந்த வழிக் கண்டு கொள்க.
வண்ணக உறுப்புப் பெற்று வந்தன எல்லாம் வண்ணக ஒரு போகு.
அவை வருமாறு:
[வண்ணக ஒரு போகு]
[அராகம்]
‘அகலிடமும் அமருலகும் அமர்பொருதும் அறந்தோற்றுப்
புகலிடநின் குடைநிழலாப் புகுமரணம் பிறிதின்றி
மறந்தோற்று நிறங்கருகி மாற்புகழும் நிலைதளரப்
புறந்தோற்றுக் கழலார்ப்பப் பொருதகளம் வெறிதாக
மண்ணுலகும் மறிகடலும் மாமலையும் நிலைகலங்க
விண்ணுலகம் வியப்பெய்த வெஞ்சமத்துள் அலைத்தனையே;
அதனால்,
கனைகடல் உடைதிரை கரைபொரக் கடைந்தனை;
முனைவரும் அமரரும் முறைமுறை வந்துநின்
இணைமலர் பலர்புகழ் பயில்வதொர் பண்பினை;
மருளுறு துதைகதிர் மணியது
மணிநிற மருளும் நின்குடை;
குடையது குளிர்நிழல் அடைகுன
உயிர்களை அளிக்கும் நின்கோல்;
கோலது செம்மையிற் குரைகடல் வளாகம்
மாலையும் காலையும் மகிழ்தூங் கின்று’.
|