|
‘கூறிய உறுப்பிற் குறைபா டின்றித்
தேறிய இரண்டு தேவ பாணியும்
தரவே குறையினும் தாழிசை ஒழியினும்
இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும்
ஒருபோ கென்ப உணர்ந்திசி னோரே’.
என்றார் மயேச்சுரர்.
வரலாறு :
[அம்போதரங்க ஒரு போகு]
[தாழிசை]
‘கரைபொருநீர்க் கடல்கலங்கக் கருவரைமத் ததுவாகத்
திரைபொருது புடைபெயரத் திண்டோளாற் கடைந்தனையே; 1
‘முகில்பொரு துடல்கலங்க முழவுத்தோள் புடைபெயர
அகல்விசும்பின் அமரர்க்கும் ஆரமுதம் படைத்தனையே; 2
‘வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத்
திரையிரியக் கடல்கடைந்து திருமகளைப் படைத்தனையே’ 3
[அராகம்]
[பேரெண்]
‘அமரரை அமரிடை அமருல கதுவிட
நுமரது புகழ்மிக மிகவிகல் அடுத்தனை;
‘அலைகடல் உலகமும் அந்தணர்க் கீந்தனை,
உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை.
[இடையெண்]
‘ஆதிக்கண் அரசெய்தினை; 1
‘நீதிக்கண் மதிநிரம்பினை ; 2
‘விளங்கெரி முதல்வேட்டனை; 3
‘துளங்கெரியவர் புகழ்துளக்கினை 4
[அளவெண்]
‘அலகு நீ;1 உலகு நீ;2 அருளு நீ;3 பொருளு நீ;4
நிலவு நீ;5 வெயிலு நீ;6 நிழலு;7 நீரு நீ;8’
|