|
வற்றை ‘வஞ்சி மண்டிலத் துறை’ என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர்
என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.
அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:
[வஞ்சி நிலைத் தாழிசை]
‘இரும்பிடியை இகல்வேழம்
பெருங்கையால் வெயில்மறைக்கும்
அருஞ்சுரம் இறந்தார்க்கே
விரும்புமென் மனனேகாண்; 1
‘மடப்பிடியை மதவேழம்
தடக்கையால் வெயில்மறைக்கும்
இடைச்சுரம் இறந்தார்க்கே
நடக்குமென் மனனேகாண்; 2
‘பேடையை இரும்போத்துத்
தோகையால் வெயில்மறைக்கும்
காடகம் இறந்தார்க்கே
ஓடுமென் மனனேகாண்’. 3
இவை ஒரு பொருண்மேல் மூன்றாய் அடி மறி ஆகாதே வந்தமையால்
வஞ்சி நிலைத்தாழிசை.
வஞ்சி மண்டிலத் தாழிசை வந்த வழிக் கண்டு கொள்க.
[வஞ்சி நிலைத் துறை]
‘மார்வுற அணிந்தாலும்
மார்வுறாய் மணிவடமே!
தோளுறச் செறித்தாலும்
தோளுறாய் கிளர்வளையே!’
இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய் அடி மறி ஆகாதே வந்தமையால்,
வஞ்சி நிலைத் துறை.
[வஞ்சி மண்டிலத் துறை]
‘முல்லைவாய் முறுவலித்தன;
கொல்லைவாய்க் குருந்தீன்றன;
மல்லல்வான் மழைமுழங்கின;
செல்வர்தேர் வரவுண்டாம்’.1
1. யா. வி. 95 உரைமேற்.
|