‘உண்டூர்ந் துதைத்தழித் தூதிக்காத் தேற்றளந்து
கொண்டெடுத்து வாய்போழ்ந்து சென்றாக்கிக் - கண்டறுத்தான்
பேய்முலை புட்சகடம் சோகோடா நீர்நிலம்
பூமலைமா தூதமிர்தம் நஞ்சு’.
எனவும்,
‘இறுத்தொசித் தட்டுதைத் தேந்திப்போழ்ந் தாடிப்
பறித்தெறிந் தூர்ந்தணைந்து காத்தான் - செறுத்த
விடைகுருந்தம் மல்லன் உருள்மலைமா கூத்து!
படைவிளவு புட்பாம் பினம்’.
எனவும்,
[தரவு கொச்சகம்]
‘பேய்முலை வியன்ஞாலம் பூங்குருந்தம் மதவேழம்
வாய்மருப் பெழிலேறு வாட்கண்ணார் குரவைச்சீர்
உண்டானும் அளந்தானும் ஒசித்தானும் காத்தானும்
கொண்டானும் கொடுத்தானும் கொடியுவணத் தானரோ’.1
எனவும் இன்ன பிறவும் வந்தவாறு கண்டுகொள்க.
இனி, முறை நிரல்நிறை, எதிர் நிரல்நிறை, மயக்க நிரல்நிறை என்று
வேண்டுவாரும் உளர்.
1] அவற்றுள் முறை நிரல்நிறை வருமாறு:
[அறுசீர் ஆசிரிய விருத்தம்]
‘பிரமன்மால் பினாகி இந்து பேரிருள் செம்மை பீதம்
விரவலில் வெண்மை வட்டம் மிக்கமுக் கோணம் நாற்கோண்
வரிசிலை வாயு வன்னி மாநிலம் வருண ராசன்
பரவலம் எடுத்தல் ஏந்தல் இழித்தலே கெடுத்த லாறே’.1
எனவும்,
‘இருணிறம் வளையம் வாயு எடுப்புதல் பிரமன் யஃகான்
எரிதிரி கோணம் செம்மை ஏற்றன்மால் இரேபை யாகும்
பெருநிலம் சதுரம் பீதம் பினாகிகோள் இழைத்த லஃகான்
வருணன்விற் றவளம் விந்து மாற்றுதல் வகாரம் வித்தே’.
எனவும்,
1. இஃது இரண்டடி எதுகைச் செய்யுள். பி - ம். 1 லர்மே.
|