ஒழிந்த இயற்சீர் பத்தும் கொண்டு தளை வழங்கப்படும்.
என்னை?
[நேரிசை வெண்பா]
‘இயற்சீர் ஒருபதும் தன்சீரோர் ஆறும்
இயற்றுப ஆசிரி யத்தென் - றியற்றுங்கால்
தன்சீர் வருமேல் தளைநோக்கார் மற்றொழிந்த
இன்சீராற் கொள்வர் தளை’.
என்பவாகலின்.
இயற்சீர் பத்துமே கொண்டு அடி வகுக்குமிடத்து நான்கு நிலைமையவாம். இரண்டெழுத்துச் சீரும், மூன்றெழுத்துச் சீரும், நான்கெழுத்துச் சீரும்,
ஐந்தெழுத்துச் சீரும் என.
என்னை?
[குறள் வெண்பா]
‘திரண்டியற்சீர் பத்திற்கும் நான்காம் நிலைமை
இரண்டாதி ஐந்தீ றெழுத்து’.
என்பவாகலின்.
அவற்றுள், ஈரெழுத்துச் சீராவன, நான்காம் அவையாவன,
‘போதுபூ, போரேறு, பாதிரி தேமா’ என இவை.
என்னை?
[குறள் வெண்பா]
‘ஈரெழுத்துச் சீராவ போதுபூப் போரேறு
பாதிரி தேமா இவை’.
என்பவாகலின்.
அவற்றுள் தேமாவும் பாதிரியும் சிறுமை ஐந்தெழுத்தடியினின்றும்
பெருமை பதினேழெழுத்தடிகாறும் உரிமையாய்ப் பதின்மூன்றடியும் ஒரோ
ஒரு சீர் பெற இரண்டுமாய் இருபத்தாறாம்.
என்னை?
|