பக்கம் எண் :
 

 494                                   யாப்பருங்கல விருத்தி

[குறள் வெண்பா]

     ‘கழிந்தமூன் றேழாதி மூவைந் துயர
     மொழிந்தனர் மூவொன்ப தென்று’.

 என்பவாகலின்.

    ஈரெழுத்தாய வழி, நான்கு சீரானும் ஆக்கப்பட்ட வெண்பாவிற்கு அடித்தொகை முப்பத்தாறு.

    என்னை?

[குறள் வெண்பா]

     ‘ஈரெழுத்து நாற்சீரா வெள்ளைக் கடித்தொகை
     கூறுவர் முப்பத்தா றென்று’.

 என்பவாகலின்.

    வெள்ளைக்கு மூவெழுத்துச் சீராவன, பாதிரியும், மாசெல்வாயும், மாபடுவாயும், புளிமாவும், போதுபூவும், போரேறும், பூமருதும், விறகுதீயும், கடியாறும் என ஒன்பது சீரும் எனக் கொள்க.

    என்னை?

[நேரிசை வெண்பா]

     ‘பாதிரியும் மாசெல்வாய் மாபடுவாய் இன்புளிமாப்
     போதுபூப் போரேறு பூமருது - தீதில்
     விறகுதீ வீழ்கடியா றொன்பதாம் என்றாங்
     கறைகுவர் மூவெழுத்துச் சீர்’.

 என்பவாகலின்.

    அவற்றுள், விறகுதீயும், கடியாறும் என்றிரண்டு சீரும் ஏழெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்தடிகாறும் உயர்ந்த பத்தடியும் ஒரோ ஒன்றிற்குப் பத்துப் பத்தாக, இரண்டிற்குமாக இருபது அடியாம்.

 என்னை?

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]

     ‘தாவில் விறகுதீத் தண்கடியா றென்றிரண்டும்
     ஏழுமுத லாகப் பதினா றுயர்த்தெண்ண
     ஆகும் அடியிருப தாம்’.

 என்பவாகலின்.