|
‘பந்தம் நீக்குறில்
அந்தம் இல்குணத்
தெந்தை பாதமே
சிந்தி நெஞ்சமே!’
இஃது ஐந்தெழுத்தடி அளவியற்சந்தம்.
‘திரித்து வெந்துயம்1
முரித்து நல்லறம்
விரித்த வேதியர்க்
குரித்தென் உள்ளமே.’
இஃது ஆறெழுத்தடி அளவியற்சந்தம்.
[வஞ்சி விருத்தம்]
‘பாடு வண்டு பாண்செயும்
நீடு பிண்டி நீழலான்
வீடு வேண்டு வார்க்கெலாம்
ஊடு போக்கும் உத்தமன்’.
இஃது ஏழெழுத்தடி அளவியற்சந்தம்.
‘முரன்று சென்று வண்டினம்?
நிரந்த பிண்டி நீழலுட்
பரந்த சோதி நாதனெம்
அரந்தை நீக்கும் அண்ணலே!’
இஃது எட்டெழுத்தடி அளவியற்சந்தம்.
‘வினயத் தான்வினைத் தொண்டினீர்!
அனகத் தானருள் காண்குறிற்
கனகத் தாமரைப் பூமிசைச்
சினனைச் சிந்திமின் செவ்வனே’.
இஃது ஒன்பதெழுத்தடி அளவியற்சந்தம்.
‘கருதிற் கவினார் கயனாட்டத்
திருவிற் புருவத் திவளேயாம்
மருவற் கினியாள் மனமென்னோ
உருவக் கமலத் துறைவாளே’.
இது பத்தெழுத்தடி அளவியற்சந்தம்.
பி - ம். 2 வெங்கயம் 1 வட்டினம்
|