பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           509

[கலி விருத்தம்]

      ‘ஆதி யானற வாழியி னானலர்ச்
      சோதி யான்சொரி பூமழை யான்வினைக்
      காதி வென்ற பிரானவன் பாதமே
      நீதி யாநினை2 வாழிய நெஞ்சமே!’1

 இது பதினோரெழுத்தடி அளவியற்சந்தம்.

      ‘குரவு தான்விரி கொங்கொடு கூடின
      மரவ மாமலர் ஊதிய வண்டுகாள்!
      இரவி போலெழி லார்க்கெம ராகிநீர்
      கரவி றூதுரை மின்கடிக் காகவே’.

 இது பன்னிரண்டெழுத்தடி அளவியற்சந்தம்.

      ‘கலையெலா முதற்கணே கண்டு கொண்டுபெண்
      கொலையினாம் கொடுந்தொழில் பூண்டு கோலவெஞ்
      சிலையினான் செழுஞ்சரம் சேர்த்த செவ்வனே
      மலையமா ருதத்தொடும் வந்து தோன்றுமே’.

 எனவும்,

[கலி நிலைத்துறை]

      ‘கோடற் கொல்லைக் கோல அரங்கிற் குவவுத்தேன்
      பாடக் கொன்றைப் பைம்பொழில் நீழற் பருவஞ்சேர்
      வாடைப் பாங்காய் மத்த மயூரக் கிழவோன்வந்
      தாடக்1 கொண்மூ ஆர்த்தன அம்பொற் கொடியன்னாய்!’

 எனவும் இவை பதின்மூன்றெழுத்தடி அளவியற்சந்தம்.

      ‘குரவக் கோலக் கொங்கணி சோலைக் குயிலாலப்
      பரவைத் தேன்காள்! பாடுமி னீரும் பகைவெல்வான்
      புரவித் தேர்மேற் போனவ ரானா தினிவந்தால்
      விரவிக் கோநின் வெங்கணை வேனிற் பொருவேளே’.

 இது பதினான்கெழுத்தடி அளவியற்சந்தம்.


      1. சூளா. சுயம் 25.
      பி - ம். 2 யானினை 1 ஆடிக்