|
அளவியலாம் என்றுரைப்பர்; அவ்வாறன் றாகில்
அளவழி யாமென்ப ரால்.’1
இதனை விரித்து உரைத்துக் கொள்க.
அளவியற் சந்தத்திற்கும் அளவியற்றாண்டகத்திற்கும் பிரத்தாரமும்
நட்டமும் உத்திட்டமும், ஒன்று இரண்டு மூன்று என்னும் முறைமையான்
ஏறச்சொன்ன இலகு செய்கையும் எண்ணும் அலகிட்டு, நில அளவையும்
எண்ணும் இவ்வாறு பிரத்தியமும் சொல்லப்படும்.
பிரத்தரிக்கும்படி:
[குறள் வெண்பா]
‘குருக்கீழ் இலகுவாம் ஏனைய ஒப்பாம்
குருந்தொகையாம் ஆதிக்கட் கூறு’
இது பிரத்தரிப்பதற்கு இலக்கணம்.
‘பிரத்தாரம்’ எனினும் ‘உறழ்ச்சி’ எனினும் ஒக்கும். ‘நட்டம்’ என்பது,
அவ்வாறு பிரத்தரிக்கப்பட்டனவற்றுள் இனைத்தாவது என்று அறிவதன்
அலகுநிலை அறியேன் என்றால், சொல்லப்பட்ட பிரத்தார எண்ணினை
அசை செய்து ஓர் இலகு வைத்துப் பாகஞ்செய்யப் போதாதவழி ஆண்டு ஓர்
உருவிட்டுப் பாகம் செய்து, ஆண்டு ஒரு குரு இடுக. இவ்வாறே பிரத்தார
அடி எழுத்துள்ளளவும் வைக்க.
அதற்கு இலக்கணம்:
[நேரிசை வெண்பா]
இனைத்தாவ தென்றறிவன் ஈடறியேன் என்றால்
அனைத்தரைசெய் தாண்டிலகு வைக்க - நினைத்தனை
விள்ளத்தான் ஆகாதேல் வேறோர் உருவிட்டுக்
கொள்ளத்தான் ஆகும் குரு.’
இது நட்டத்திற்கு இலக்கணம். ‘நட்டம்’ எனினும் ‘கேடு’ எனினும்
ஒக்கும்.
இனி, ‘பிரத்தரித்தன் அலகிருக்கை அறிவேன்; எனைத்தாவது என்று
அதன் எண் அறியேன்’ என்றால், அதன் பிரத்
1. யா. வி. பக். 506
|