பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           535

      ‘கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன’1

      இதனுட் பதினாறும், பதினைந்தும், பதினான்கும், பதின்மூன்றும் எழுத்து வந்தன.

      ஒன்பதும், பத்தும், பதினொன்றும், பன்னிரண்டும் ஆகிய எழுத்தான் வந்த முச்சீரடி வஞ்சிப்பா வந்தவழிக் கண்டுகொள்க.

      எல்லா அடிகளும் எழுத்து ஒத்து வரும் கலிகளைக் கட்டளைக்கலி என்றும், ஒவ்வாது வருவனவற்றைக் கலம்பகக்கலி என்றும் வழங்குவர். இவ்வாறே கட்டளை ஆசிரியம், கலம்பக ஆசிரியம் என்றும்; கட்டளை வஞ்சி, கலம்பக வஞ்சி என்றும் வழங்கப்படும்.

[கலி விருத்தம்]

      ‘கட்டளை கலம்பகம் சமநடை சமவியம்
      மட்டவிழ் குழலினாய்! மயூர சமவியம்
      ஒட்டினார் எழுத்தினால் ஒட்டி ஒண்டமிழ்க்
      கிட்டமா யவர்கள்வெண் பாவின் பேர்களே.’

 இதனை விரித்து உரைத்துக்கொள்க.

      இனி, இருபது எழுத்தின் மிக்க நாற்சீரடிப் பாவினம் வருமாறு:

[தரவு கொச்சகம்]

      ‘கொடிகொடியோடு மிடைவனவுள குடைகுடையொடு குடைமிசையுள
      கடிநறுமலர் சொரிவனவுள கடிமதிலுள கவரியுமுள
      அடிவழிபடும் அமரருமுளர் அருளாழியொ டரியணையுள
      இடிமுரசமும் அதிர்வனவுள இனிதினிதவ ரதுதுறவுமே.’

 என வரும்.

      இனிச் சந்தங்கட்கும் தாண்டகங்கட்கும் பிரத்தாரம் முதலாகிய ஆறு பிரத்தியமும் சொல்லப்படும்.

      என்னை?

[நேரிசை வெண்பா]

      ‘சந்தமும் தாண்டகமும் தம்முள் எழுத்திலகு
      வந்த முறைமை வழுவாவேல் - முந்தை


  1. யா. வி. 90 உரைமேற்.