|
இஃது ஆறெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.
இவை மூன்றும் குறளடி.
1. ‘காழ்வரக் கதம்பேணாக் (7)
கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின்’1
இஃது ஏழெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.
2. ‘தாழிரும் பிணர்த்தடக்கைத்
தண்கவுள் இழிகடாத்து.’2
இஃது எட்டெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.
3. ‘நிலனெளியத் தொகுபீண்டி’3
இஃது ஒன்பது எழுத்து இருசீரடி வஞ்சிப்பா.
இவை மூன்றும் சிந்தடி.
1. ‘அகன்ஞாலம் நிலைதுளங்கினும்
பகன்ஞாயிற் றிருள்பரப்பினும்’
இது பத்தெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.
2. ‘தாள், களங்கொளக் கழல்பறைந்தன.’4
இது பதினோரெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.
3. ‘குருகிரிதலின் கிளிகடியினர்’
இது பன்னிரண்டெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.
இவை மூன்றும் அளவடி.
இனி எட்டெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின் காறும் உயர்ந்த
முச்சீரடி வஞ்சிப்பா வருமாறு:
1. ‘அள்ளற் பள்ளத் தகன் சோணாட்டு’5
எனவும்,
2. ‘வேங்கை வாயில் வியன்குன்றூர்’6
எனவும் இவை எட்டெழுத்து முச்சீரடி வஞ்சிப்பா.
‘மதுரவிரவிய மலர்கஞலிய வயற்றாமரை’
இது பதினேழெழுத்து முச்சீரடி வஞ்சிப்பா.
1 யா. வி. 93 உரை மேற். ‘தாழிரும் பிணர்த்தடக்கை’ என்னும் குறளடி
வஞ்சிப்பாவின் அடி 3, 4.2 யா. வி. 93 உரை மேற். 3 யா. வி. அடி 5.4
புறம். 4:3.5, 6 யா. வி. 94 உரை மேற்.
|