|
2. ‘வாயாநோய் மருந்தாகி வருந்தியநாள் இதுவன்றோ?’
இது பதினாறெழுத்தடிக் கலிப்பா.
3. ‘மாவலிசேர் வரைமார்பின் இகல்வெய்யோன் மனமகிழ’
இது பதினேழெழுத்தடிக் கலிப்பா.
இவை மூன்றும் நெடிலடி.
1. ‘அறனின்றமிழ் கையொழியான் அவலங்கொண்
டதுநினையான்’
இது பதினெட்டெழுத்தடிக் கலிப்பா.
2. ‘உகுபனிகண் உறைப்பவுநீ ஒழிவொல்லாய் செலவழித்தல்’
இது பத்தொன்பது எழுத்தடிக் கலிப்பா.
3. ‘நிலங்கிளையா நெடிதுயிரா நிறைதளரா நிரைவளையாள்
கலந்திருந்தார் கதுப்புளரார் கயல்கடிந்த கருந்தடங்கண்’
இஃது இருபதெழுத்தடிக் கலிப்பா.
இவை மூன்றும் கழிநெடிலடி.
இவையெல்லாம் குற்றிகர குற்றுகரங்களும், ஒற்றும், ஆய்தமும் நீக்கி எழுத்தெண்ணி முதலடியே கொள்க.
இனி, நாலெழுத்து முதலாகப் பன்னிரண்டு எழுத்தின் காறும் உயர்ந்த ஒன்பது நிலமும் பெற்ற இருசீரடி வஞ்சிப்பா வருமாறு:
[வஞ்சிப்பா]
1 ‘கல்சேர்ந்து கால்தோன்று
மல்குநீர் புனல்பரப்பும்’ (4)
இது நாலெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.
2 ‘தண்பால் வெங்கள்ளின்’ (5)
இஃது ஐந்தெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.
3. ‘கண்டுதண்டாக் கட்கின்பத் (6)
துண்டுதண்டா மிகுவளத்தான்’
|