பக்கம் எண் :
 

 532                                   யாப்பருங்கல விருத்தி

 எனவும் இவை எல்லா அடியும் எழுத்து ஒவ்வாது வந்தமையால், கலம்பக வெண்பா.

[சமநடை வெண்பா] 1

      ‘சென்று புரிந்து திரிந்து செருவென்றான்
      மின்றிகழும் வெண்குடைக்கீழ் வேந்து.’

      இஃது ஈற்றடியும் ஏனை அடியும் எழுத்து ஒத்து வந்தமையால், சமநடை வெண்பா.

      சமவியல் வெண்பா வந்தவழிக் கண்டுகொள்க.

[மயூரவியல் வெண்பா]

      ‘குருந்து குளிர்ந்து மயங்கு குவட்டு
      மருந்து கொணர்ந்து மகிழ்ந்து நமது
      பெரும்பிணியை நீக்குவதாம் பீடு.’

      இஃது ஈற்றடி மிக்கு, ஏனை அடி குறைந்து, தம்முள் ஒவ்வாது வந்தவையால் மயூரவியல் வெண்பா.

      இனி, பதின்மூன்று எழுத்தடி முதலாகிய இலக்கணக்கலி எட்டும் வருமாறு:

[இலக்கணக் கலிப்பா]

      1. ‘அன்றுதான் குடையாக வின்றுநளி நீர்சோரக்
        குன்றெடுத்து மழைகாத்த கோலப்பூண் மார்பினோய்!’

 இது பதின்மூன்று எழுத்தடிக் கலிப்பா.

      2. ‘மாசற்ற மதிபோல வனப்புற்ற முகங்கண்டு                 (14)
        தூசுற்ற துகின்மருங்கிற் றுடிநடு வெனத்தோன்றி’

 இது பதினான்கு எழுத்தடிக் கலிப்பா.

      இவை இரண்டும் அளவடி.

      1.  ‘ஊனுடை உழுவையின் உதிரந்தோய் உகிர்போல
         வேனிலை எதிர்கொண்டு முருக்கெல்லாம் அரும்பினவே.’

 இது பதினைந்து எழுத்தடிக் கலிப்பா.


  பி - ம். 1 தமிழ்து.