பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           531

      ‘மாவடு வென்னும் மலர்புரை கண்ணினாய்!
      பாவெடுத்துப் பாடும் பயனோக்கி - மேவி
      எடுத்த இனத்தினால் இன்பஞ்சொற் சேரத்
      தொடுத்த மொழிவ தமிழ்.’11

 எனவும்,

      ‘கரவொடு நின்றார் கடிமனையிற் கையேற்
      றிரவொடு நிற்பித்த தெம்மை - அரவொடு
      மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க
      மாட்டாமை பூண்ட மனம்.’2

 எனவும்,

      ‘நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
      சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே - பொற்றேரான்
      பாலைநல் வாயின் மகள்.’3

 எனவும்,

      இன்னமிழ்தம் ஊட்டி எழில்வளைசேர் முன்கைக்கொண்
      டென்னையர்பேர் சொல்லென் றிரந்தாலும் - தென்னயம்பைச்
      செஞ்சுடர்வாள் வெஞ்சினவேற் சீர்ச்சேந்தன் என்னுமால்
      கிஞ்சுகவாய் அஞ்சொற் கிளி.’

 எனவும் இவை ஈற்றடியல்லா ஏனையடியெல்லாம் எழுத்து ஒத்து வந்தமையாற் கட்டளை வெண்பா.

[கலம்பக வெண்பா]

      ‘மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும்
      அந்தரமும் எல்லாம் அளப்பரிதே - இந்திரர்கள்
      பொன்சகள ஆசனமாப் போர்த்து மணிகுயின்ற
      இன்சகள ஆசனத்தான் ஈடு.’4

 எனவும்,

      ‘தானோரும் எம்முள்ளி வாராது தானண்ணி
      வானோரை வாட உரப்புங்கொல் - வானோர்
      முடிக்கோடி தேய்த்தான் மூவமிழ்தம் தந்தான்
      அடிக்கோடி மீளாத அன்பு?’


  1. இடைக்காடனார் பாடல். 2. தண்டி. 62. மேற். 3. யா. வி. 59.  உரைமேற். 5. 4. யா. வி. 57. உரை மேற்.