|
‘இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.’1 (9)
இஃது ஒன்பதெழுத்து ஈற்றடி வெண்பா.
‘குணம்புரியா மாந்தரையும் கூடுமால் என்னே
மணங்கமழும் தாமரைமேல் மாது!’ (10)
இஃது பத்தெழுத்து ஈற்றடி வெண்பா.
ஒழிந்தனவும் வந்தவழிக் கண்டு கொள்க.
இனி, ஒருசார் ஆசிரியர், ஈற்றடி ஒழித்து ஏனையடி எழுத்து ஒத்து
வருவனவற்றைக் ‘கட்டளை வெண்பா’ என்றும், ஒவ்வாது வருவன வற்றைக்
‘கலம்பகவெண்பா’ என்றும், ஈற்றடி எழுத்தும் ஏனையடி எழுத்தும் ஒத்து
வருவனவற்றைச் ‘சமநடை வெண்பா’ என்றும், ஈற்றடி எழுத்தினோடு
ஏனையடி எழுத்துச் சில ஒத்தும் ஒவ்வாதும் வருவனவற்றைச் ‘சமவியல்
வெண்பா’ என்றும், ஈற்றடி எழுத்து மிக்கு ஏனையடி எழுத்துக் குறைந்து
தம்முள் ஒவ்வாது வருவனவற்றை ‘மயூரவியல் வெண்பா’ என்றும்
வழங்குவர்.
அவற்றுட் சில வருமாறு:
[கட்டளை வெண்பா]
‘நடைக்குதிரை ஏறி நறுந்தார் வழுதி
அடைப்பையா! கோறா,’ எனலும் - அடைப்பையான்
கொள்ளச் சிறுகோல் கொடுத்தான் றலைபெறினும்,
எள்ளா தியங்காண் டலை.’2
‘வெறிகமழ் தண்புறவின் வீங்கி உகளும்
மறிமுலை உண்ணாமை வேண்டிப் - பறிமுன்கை
அஉ அறியா அறிவில் இடைமகனே!
நொஅலையல் நின்னாட்டை நீ.3
எனவும்,
குறள். 233. 2. யா. வி. உரைமேற். 3. யா. வி. 7, 37. உரைமேற்.
|