|
[நேரிசை வெண்பா]
முகமறிந்தார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம் (15)
அகமறையாத் தாம்வாழு மென்றோர்க் - ககமறையா
மன்னைநீ வார்குழை வையெயிற்றாய்! என்னோமற்
றென்னையாம் வாழும் எனல்!’
இது பதினைந்தெழுத்தடி வெண்பா.
[குறள் வெண்பா]
‘படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார் (16)
மாண்பயன் எய்தல் அரிது.’1
இது பதினாறெழுத்தடி வெண்பா.
இவை இரண்டும் நெடிலடி.
இனி, வெண்பாவின் ஈற்றடிக்கு இலக்கியம் வருமாறு:
[குறள் வெண்பா]
‘பிண்டி மலர்மேற் பிறங்கெரியுட் கந்துருள்போல்
வண்டு சுழன்று வரும்.’ (5)
இஃது ஐந்தெழுத்து ஈற்றடி வெண்பா.
நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.’2 (6)
இஃது ஆறெழுத்து ஈற்றடி வெண்பா.
‘உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.’3 (7)
இஃது ஏழெழுத்து ஈற்றடி வெண்பா.
‘புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்?’4 (8)
இஃது எட்டெழுத்து ஈற்றடி வெண்பா.
குறள் 606 2. குறள். 234. 3. குறள்.232. 4. குறள். 237.
|