|
[நேரிசை வெண்பா]
‘நின்று திரியும் சுடருளை நில்லாது (10)
வென்று திரிதருவேன் யானுளனாச் - சென்றோங்கி
மண்ணக மார்பின் மறையலோ மற்றினியென்
கண்ணகத்துப் பட்ட படி.’
இது பத்தெழுத்தடி வெண்பா.
‘இற்றென் உடம்பின் எழினலம் என்றென்று (11)
பற்றுவிட் டேங்கும் உயிர்போல - மற்று
நறுமென் கதுப்பினாள் தோடோயின் நண்ணும்
மறுநோக் குடையவாம் கண்.’
இது பதினோரெழுத்தடி வெண்பா.
‘புறத்தன நீருள பூவுள1மாவின் (12)
திறத்தன கொற்சேரி யவ்வே - அறத்தின்
‘மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி
முகனை முறைசெய்த கண்.’1
இது பன்னிரண்டெழுத்தடி வெண்பா.
‘இரியன் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற (13)
அரியிளஞ்2 செங்காற் குழவி அருகிருந்
தூமன்பா ராட்ட உறங்கிற்றே3 செம்பியன்றன்
நாமம்பா ராட்டாதார் நாடு.’2
இது பதின்மூன்றெழுத்தடி வெண்பா.
‘மணிமிடைந்த பைம்பூண் மலரணிதார் மார்பன் (14)
அணிமகர வெல்கொடியா னன்னான் - தனிநின்று
தன்னை வணங்காமைத் தானாணங்க வல்லாளே4
என்னை அணங்குறியி னாள்.’11
இது பதினான்கெழுத்தடி வெண்பா.
இவை ஐந்தும் அளவடி.
தண்டி. 40. மேற். 2. முத்தொள்ளாயிரம்.
பி - ம். 1 வூரண நீரன. 2 அரிவிரவும். அரையிருளில். 3 உறங் குமே.
4 வணங்காமற் றான்வணங்க வல்லானே. 11 என்னை வணிங்குரியினான்.
|