பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           527

      நெடிலடி      15-17

      அணிநடை அசைஇய அரியமை சிலம்பின்                    (15)
      மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல்                 (16)
      ஒளிநிலவு வயல்கிழை உருவுடை மகளொடு                   (17)

      கழிநெடிலடி      18-20

      நளிமுழவு முழங்கிய அணிநிலவு நெடுநகர்                    (18)
      இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை                 (19)
      கலனளவு கலனளவு நலனளவு நலனளவு                     (20)
      பெருமணம் புணர்ந்தனை என்பவஃ

      தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே.’1

 என்னும் ஆசிரியம், நான்கெழுத்து முதலாக இருபது எழுத்தின் காறும் உயர்ந்த பதினேழ் நிலமும் பெற்று, குறளடி முதலாகிய ஐந்தடியாலும் வந்தது.

 இவ்வெழுத்துக்களால் வெண்பா வருமாறு: (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

      ‘மட்டுத்தான் உண்டு மதஞ்சேர்ந்து விட்டுக்                    (7)
      களியானை கொண்டுவா என்றான் - களியானைக்
      கியாரோ எதிர்நிற் பவர்!’

      இஃது ஏழெழுத்தடி வெண்பா.

      ‘ஆர்த்தார்த்துக் கண்சேந்து வேர்த்து விரைந்துதன்             (8)
      பொன்னோடை யானையின் மேற்கொண்டான் - என்னாங்கொல்
      மன்னர் உறையும் மதில்!’

 இஃது எட்டெழுத்தடி வெண்பா.

[குறள் வெண்பா]

      ‘சென்று முகந்து நுதலாட்டி மாறேற்று                        (9)
      வென்று பெயர்ந்தானெங் கோ.’

 இஃது ஒன்பதெழுத்தடி வெண்பா.

      இவை மூன்றும் சிந்தடி.


 1. யா. வி. 95. உரைமேற்.