|
எழுத்து ஆவது சிறப்புடைத்து; இரண்டெழுத்தினால் அருகி
வரப்பெறுமாயினும் எனக் கொள்க.
என்னை?
[நேரிசை வெண்பா]
‘அளவியற்பா ஆன்றசீர் ஐந்தெழுத்திற் பல்கா;
வளவஞ்சிக் காறுமாம் மாதோ;- வளவஞ்சிச்
சின்மையொரு மூன்றாகும் என்பர் சிறப்புடைமைத்
தன்மை தெரிந்துணவோர் தாம்.’1
என்பவாகலின்.
அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:
[நேரிசை வெண்பா]
குறளடி
4-6
பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து (4)
தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து (5)
வண்டு சூழ விண்டு வீங்கி (6)
சிந்தடி
7-9
நீர்வாய் கொண்டு நீண்ட நீலம் (7)
ஊர்வாய் ஊதை வீச ஊர்வாய்1 (8)
மணியேர் நுண்டோ டொல்கி மாலை (9)
அளவடி
10-14
நன்மணம் கமழும் பன்னெல் ஊர! (10)
அமையேர் மென்றோள் ஆயரி நெடுங்கண் (11)
இணையீ ரோதி ஏந்திள வனமுலை (12)
இறும்பமென் மலரிடை யெழுந்த மாவின் (13)
நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தே ரல்குல் (14)
1 யா. வி. 25. உரைமேற்
பி - ம். 1 ஈர்வாய். 2 மதியேர்.
|