பக்கம் எண் :
 

 538                                   யாப்பருங்கல விருத்தி

      அதற்கு இலக்கணம்:

[நேரிசை வெண்பா]

      ‘ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறே ழெட்டொன்ப
      தென்றுயர் விச்சை அளவொரீஇ - ஒன்றிலொன்
      றிட்டிட் டிறுதி ஒழித்தொழிய ஏகாதி
      ஒட்டி இலகுகொண் டொட்டு.’

      இனி இவ்விருத்தத்தில் விரிந்த விருத்தச் சாதியில் இன்ன தனை விருத்தம், இன்னதனை எழுத்து, இன்னதனைக் குரு, இன்னதனை இலகு, இன்னதனை மாத்திரை என்று வரையறுத்துக் கூறுமாறு:

      ஒரு விருத்தத்தினைப் பிரத்தார முறையால் உறழ்ந்து பெற்ற விருத்தங்களைத் திரட்டி ஐந்து படி வைத்து, முதற்படி ஒழித்து ஒழிந்த நான்கு படியினையும் விருத்தத்து ஓரடியுள் எழுத்து எண்ணிக்கொண்டு, அவ்வெழுத்துக்களால் மாற, மூன்றாம் படியினையும் நான்காம் படியினையும் அரை செய்து, முடிவிற் படியில் அதன் பாதம் ஒரு பத்திரமாகக் கூட்டினால், முதற்படி, விருத்தங்களது அளவையாம்; இரண்டாம் படி, எழுத்துக்களது அளவையாம்; மூன்றாம் படியும் நான்காம் படியும், குரு இலகுக்களது அளவையாம்; ஐந்தாம் படி, மாத்திரைகளது அளவையாம்.

      அதற்கு இலக்கணம்:

[இன்னிசை வெண்பா]

      ‘விருத்த விருத்தியினை வேறைந்தா நாட்டி
      விருத்த அடியெழுத்தால் மாறி - அருத்திக்க
      மூன்றொடு நான்காய குப்பை ஒருக்கதன்
      பாதியுடன் வைக்கமே லே.’4

      ‘விருத்த விருத்தியதன்1 வீவில் எழுத்துக்
      குருக்களோ டேனைக் குறைவில் இலகு
      வருக்கத்தின் மாத்திரை என்றிவை ஐந்தும்
      விகற்பித்து வேண்டப் படும்.’

 விரித்த அப்பிரத்தார2 விருத்தங்களை இரட்டித்து ஒன்று களைய, விரல் அளவையாம்.


  பி - ம். 1 விதியதனை 2 விருத்தப்பிரத்தார.