பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           539

[குறள் வெண்பா]

      ‘பிரத்தார எண்ணிரட்டித் தொன்று களைய
      விரற்களவை யாகி விடும்.’

 என்றாராகலின்.

      அவ்விரற் பன்னிரண்டு கொண்டது சாணாம். சாண் இரண்டு கொண்டது முழமாம். முழம் நான்கு கொண்டது கோலாம். கோல் ஐஞ்ஞூறு கொண்டது கூப்பீடாம். கூப்பீடு நான்கு கொண்டது காதமாம். இவ்வாறு வகுத்துப் பிழையாமற் கூறுக.

      அதற்கு இலக்கணம்:

[கலி விருத்தம்]

      ‘பெருக்கிய வாறு பிரத்தரித் தாங்கட்
      டருக்கிய நாவலர் சந்தத் தரணி
      இரட்டித் ததனந்தத் தொன்று களைய
      விரற்கள வாமென்று வேண்டுவர் தாமே.’

[நேரிசை வெண்பா]

      ‘நாலிருசாண் கொண்டது நற்கோலாம்; ஐந்நூறு
      கோலியைந்த நீளம் குரோசமே; - நாலு
      குரோசமோர் காவதமாம்; குன்றாத சாணும்
      விரோதந்தீர் முந்நால் விரல்.’

[குறள் வெண்பா]

      ‘முந்நால் விரற்சாண் இரண்டுகை நான்குகோல்
      ஐஞ்ஞூறு கூப்பீ டளவு.’

[நேரிசை வெண்பா]

      ‘பரமாணுத் தேர்த்துகள் பஞ்சித்துய் எஞ்சா
      மயிர்மணல் ஐயவி எண்ணெல் - விரலளவும்
      எட்டெட்டா ஏறும் எழில்விரல் ஆதியா
      ஒட்டினவும் நூன்முறையால் ஒட்டு.’