பக்கம் எண் :
 

 540                                  யாப்பருங்கல விருத்தி

[குறள் வெண்பா]

      படையொடுதீ நீர்வளியாற் பங்கப் படாத
      முடிபொருள் முந்தை அணு.’

 இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

[நேரிசை வெண்பா]

      ‘உறழ்ச்சிகே டுத்திட்டம் ஒன்றிரண்டென் றேத்தித்
      திறப்படுத்த திண்ணிலகுச் செய்கை - சிறப்பித்தாங்
      கெண்ணி நிலவளவோ டேய்ந்த இருமூன்றே
      திண்ணியோர் கண்ட தெளிவு.’

      இது சமவிருத்தங்கட்கு ஆறு பிரத்தியமும் சொன்னவாறு.

      இனி, ஒருசார் ஆசிரியர், உறழ்ச்சி நில அளவுகளை விகற்பித்துச் சொல்லுமாறு:

      உறழ்ச்சி இருவகைப்படும்: முற்றக் குருவே வைத்து உறழ்தலும் முற்ற இலகுவே வைத்து உறழ்தலும் என.

      அவற்றுள் முற்றக் குருவே வைத்து உறழுமாறு:

[குறள் வெண்பா]

      ‘குருக்கீழ் இலகுவாம் ஏனைய ஒப்பாம்
      குருத்தொகையாம் ஆதிக்கட் கூறு.’

 எனக் கொள்க.

      பிரத்தாரம் செய்தற்கு இலக்கணம்:

[குறள் வெண்பா]

      ‘ஈறு வருக்கித் திழித்திரட்டித் தன்றவற்றான்
      மாறியுய்த் திங்ஙனே வைத்து.’1

 (?) எனவும்,

      ‘ஆர்த்த படியினெதி ரச்சுன் வருமாயிற்
      பேர்த்திருகால் வைக்க பெரிது.’2

 எனவும் கொள்க.


  1. 2 இவற்றின் சரியான பாடம் கிடைக்கவில்லை.