பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           541

[நேரிசை வெண்பா]

      ‘இரண்டுநான் கெட்டுப் பதினாறு முப்பத்
      திரண்டொடறு பத்துநான் கென்றாங் - கிரட்டித்தே
      உற்கிருதி காறும் உலையா முறைமையால்
      நற்குரைப்பான் நாவலனா வான்.’

      ‘ஒன்றாதி என்றார் வடபுலவோர் சந்தங்கட்
      கென்றார் இருமூன் றெழுத்தாதி - தென்றமிழாற்
      சீரிரண்டாம் என்றுரைத்தார் எல்லாரும் மேன்மூன்றோ
      டோரிரண்டாம் என்றார் உயர்வு.’

[குறள் வெண்பா]

      ‘ஈரைஞ் ஞூற் றெண்மூன்றாம் என்பர் பிரத்தரித்தால்
      ஈரைந்தாம் சந்தத்திற் கெண்.’

 பத்தாம் சந்தத்திற்கு எண், ஆயிரத்து இருபத்து நான்கு என்றவாறு.

[குறள் வெண்பா]

      ‘மதிலிரண்டு மாவாறு வாய்ந்த வசுக்கள்
      பதினைந்தாம் சந்தப் பரப்பு.’

      பதினைந்தாம் சந்தத்திற்குத் தொகை, முப்பத்தீராயிரத்து எழுநூற்று அறுபத்தெட்டு.

[குறள் வெண்பா]

      ‘உருவுபா ழென்பரவை யோரெட்டைந் தேழா
      றிருபதாம் சந்தத்தின் எண்.’

      இருபதாம் சந்தத்திற்குத் தொகை, பத்து லட்சத்து நாற்பத்தெண்ணாயிரத்து ஐஞ்ஞூற்று எழுபத்தாறு.

[குறள் வெண்பா]

      ஆறேழ் உருவுபாழ் எட்டோடு மங்கலமாம்
      ஆறோடுநான் குற்கிருதிக் காம்.’

      இருபத்தாறாம் சந்தத்திற்குத் தொகை, ஆறு கோடியே எழுபத்தொரு லட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்து நாலு.