|
[குறள் வெண்பா]
‘ஏற இரட்டித் திழிய அரைசெய்து
கூறுக தேறும் பொருள்.’
‘உத்தம்’ என்னும் ஓரெழுத்து முதற் சந்தத்திற்குப் பிரத்தார எண்
தொகை 2; இரண்டாம் சந்தத்திற்கு 4; மூன்றாம் சந்தத்திற்கு 8; நாலாம்
சந்தத்திற்கு 16; ஐந்தாம் சந்தத்திற்கு 32; ஆறாம் சந்தத்திற்கு 64; ஏழாம்
சந்தத்திற்கு 128; எட்டாம் சந்தத்திற்கு 256; ஒன்பதாம் சந்தத்திற்கு 512;
பத்தாம் சந்தத்திற்கு 1,024; பதினோராம் சந்தத்திற்கு 2,048; பன்னிரண்டாம்
சந்தத்திற்கு 4,096; பதின்மூன்றாம் சந்தத்திற்கு 8,192; பதினான்காம்
சந்தத்திற்கு 16,384; பதினைந்தாம் சந்தத்திற்கு 32,768; பதினாறாம்
சந்தத்திற்கு 65,536; பதினேழாம் சந்தத்திற்கு 131,072; பதினெட்டாம்
சந்தத்திற்கு 262,144; பத்தொன்பதாம் சந்தத்திற்கு 524,288; இருபதாம்
சந்தத்திற்கு 1,048,576; இருபத்தோராம் சந்தத்திற்கு 2,097,152;
இருபத்திரண்டாம் சந்தத்திற்கு 4,194,304; இருபத்துமூன்றாம் சந்தத்திற்கு
8,388,608; இருபத்து நான்காம் சந்தத்திற்கு 16,777,216; இருபத்தைந்தாம்
சந்தத்திற்கு 33,554, 432; ‘உற்கிருதி’ என்னும் இருபத்தாறாம்
சந்தத்திற்குப் பிரத்தார அடித்தொகை 67,108,864.
இது பிரத்தார எண்களின் தொகை. ‘உத்தம்’ என்னும் ஓரெழுத்துச்
சந்தம் முதலாக, ‘உற்கிருதி’ என்னும் இருபத்தாறு எழுத்துச் சந்தத்தளவும்
முறையானே கண்டுகொள்க.1
பிரத்தரித்து நின்ற சந்தத்தினும் இரண்டு களைய, அதன் கீழ்ப் போன
சந்தம் எல்லாவற்றிற்கும் தொகையாம்.
இனி, விரல் அளவு சொல்லுமாறு:
பி - ம். 1 ‘உத்தம்’ முதலிய இருபத்தாறு சந்தங்களின் பெயர்கள்; 1.
உத்தம். 2. அதியுத்தம். 3. மத்திமம். 4. நிலை. 5. நன்னிலை. 6. காயத்திரி 7.
உண்டி. 8. அனுட்டுப்பு. 9. பகுதி. 10. பந்தி. 11. வனப்பு. 12. சயதி. 13.
அதி சயதி. 14. சக்குவரி. 15. அதிசக்குவரி. 16. ஆடி. 17. அதியாடி. 18.
திருதி. 19. அதிதிருதி. 20. கிருதி. 21. பிரகிருதி. 22. ஆகிருதி. 23. விக்கிருதி.
24. சங்கிருதி. 25. அபிகிருதி. 26. உற்கிருதி. இவற்றிற்கு மேற்கோள்
இலக்கியங்களை வீரசோழியம், யாப்புப்படலம் 33 ஆம் காரிகையின்
உரைநோக்கி யறிக.
|