பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           543

[குறள் வெண்பா]

      ‘பிரத்தார எண்ணிரட்டித் தொன்று களைய
      விரற்களவை யாகி விடும்.’

      ‘ஆதி இரட்டித் ததனகத் தொன்றிடினும்
      வேறுபா டில்லை விரல்’

      ‘ஒருபடி நீக்கி ஒழிந்த தரைசெய்தால்
      ஆதி யதற்கு விரல்.’

[நேரிசை வெண்பா]

      ‘மூன்றேழு மூவைந்து முப்பதின்மேல் ஓருருவு
      மூன்றுடை மூவிருபான் ஒன்றிரண்டேழ் - தோன்ற
      இரட்டித்தாங் கோருருவிட் டெண்ணுவான் காணும்
      விரற்றொகையா நின்ற விரி.’

      முதல் விருத்தத்தின் பிரத்தார நில அளவை விரல் மூன்று; இரண்டாவதன் நில அளவை விரல் ஏழு; மூன்றாவதன் நில அளவை விரல் பதினைந்து; நாலாவதன் நில அளவை விரல் முப்பத்தொன்று; ஐந்தாவதன் நில அளவை விரல் அறுபத்து மூன்று; ஆறாவதன் நில அளவை விரல் நூற்றிருபத்தேழு; ஏழாவதன் நில அளவை விரல் இருநூற்று ஐம்பத்தைந்து; எட்டாவதன் நில அளவை விரல் ஐந்நூற்றுப் பதினொன்று; ஒன்பதாவதன் நில அளவை விரல் ஆயிரத்து இருபத்து மூன்று; பத்தாவதன் நில அளவை விரல் இரண்டாயிரத்து நாற்பத்தேழு ; பதினொன்றாவதன் நில அளவை விரல் நாலாயிரத்துத் தொண்ணூற் றைந்து; பன்னிரண்டாவதன் நில அளவை விரல் எண்ணாயிரத்து நூற்றுத் தொண்ணூற்றொன்று; பதின்மூன்றாவதன் நில அளவை விரல் பதினாயிரத்து முந்நூற்று எண்பத்து மூன்று; பதினாலாவதன் நில அளவை விரல் முப்பத்தீராயிரத்து எழுநூற்று அறுபத்தேழு ; பதினைந்தாவதன் நில அளவை விரல் அறுபத்தையாயிரத்து ஐந்நூற்று முப்பத்தைந்து; பதினாறாவதன் நில அளவை விரல் லட்சத்து முப்பத்தோராயிரத்து எழுபத்தொன்று; பதினேழாவதன் நில அளவை விரல் இரண்டு லட்சத்து அறுபத்தீராயிரத்து நூற்று நாற்பத்து மூன்று; பதினெட்டாவதன் நில அளவை விரல் ஐந்து லட்சத்து இருபத்து நாலாயிரத்து இருநூற்று எண்பத்தேழு ; பத்தொன்பதாவதன் நில அளவை விரல் பத்து லட்சத்து நாற்பத்தெண்ணாயிரத்து