|
ஐந்நூற்று எழுபத்தைந்து; இருபதாஞ் சந்தத்தின் பிரத்தார நில அளவை
விரல் இருபது லட்சத்துத் தொண்ணூற்றேழாயிரத்து நூற்று ஐம்பத்தொன்று;
இருபத்தோராஞ் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் நாற்பத்தொரு
லட்சத்துத் தொண்ணூற்று நாலாயிரத்து முந்நூற்று மூன்று; இருபத்திரண்டாம்
சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் எண்பத்து மூன்று லட்சத்து
எண்பத்தெண்ணாயிரத்து அறுநூற்றேழு ; இருபத்து மூன்றாஞ் சந்தத்தின்
பிரத்தார நில அளவை விரல் ஒரு கோடியே அறுபத்தேழு லட்சத்து
எழுபத்தேழாயிரத்து இருநூற்றுப் பதினைந்து; இருபத்து நாலாம் சந்தத்தின்
பிரத்தார நில அளவை விரல் மூன்று கோடியே முப்பத்தைந்து லட்சத்து
ஐம்பத்து நாலாயிரத்து நானூற்று முப்பத்தொன்று; இருபத்தைந்தாவது
சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் ஆறு கோடியே எழுபத்தொரு
லட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்து மூன்று; ‘உற்கிருதி, என்னும்
இருபத்தாறாம் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் பதின்மூன்று
கோடியே நாற்பத்திரண்டு லட்சத்துப்
பதினேழாயிரத்து எழுநூற்று இருபத்தேழு.
இவை உத்தம் முதல் உற்கிருதி ஈறாகிய சம விருத்தங்களது பிரத்தார
நில அளவை விரல்; முறையானே கண்டு கொள்க.
[குறள் வெண்பா]
‘இராயிரத்து நாற்பத்தே ழென்றுரைப்பர் பத்து
விராயதற்குச் சொன்ன விரல்.’
‘ஆறைந்தைந் தையே ழெனவுரைப்பர் மூவைந்து
மேவிய பூமி விரல்.’
‘இரண்டுபாழ் மும்மூன்றே ழேகமைந் தொன்றே
வருமிருபான் பூமி விரல்.’
‘ஒன்றுதீ நான்கிரண்டோ டொன்றேழ் முனியிரண்டேழ்
நற்கிருதிச் சந்த விரல்.’
ர
விரலைச் சாணும் முழமும், கோலும், கூப்பிடும் காதமும் செய்து
சொல்லுமாறு.
|