பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           547

     இவ்வுரைச் சூத்திரத்தின் கருத்தாவது: தான் வேண்டப் பட்ட சந்தத்தின் எழுத்துக்களை வருக்கித்து அரை செய்து, அவ்வருக்க மூலத்துட் சந்த எழுத்தின் அரை கூட்ட, அச் சந்தங்கள் அளவெழுத்துச் சங்கையாம்; அவற்றை நான்கினால் மாற, நான்கடிக்கும் எழுத்தாம்;

     ‘உத்தம்’ என்னும் முதற்சந்தத்திற்கு எழுத்து நான்கு; இரண்டா வதற்கு எழுத்து எட்டு; மூன்றாவதற்கு பன்னிரெண்டு; நான்காவதற்குப் பதினாறு; ஐந்தாவதற்கு இருபது; ஆறாவதற்கு இருபத்துநாலு; ஏழாவதற்கு இருபத்தெட்டு; எட்டாவதற்கு முப்பத்திரண்டு; ஒன்பதா வதற்கு முப்பத்தாறு; பத்தாவதற்கு நாற்பது; பதினொன்றாவதற்கு நாற்பத்து நாலு; பன்னிரண்டாவதற்கு நாற்பத்தெட்டு; பதின் மூன்றாவதற்கு ஐம்பத்திரண்டு; பதினான்காவதற்கு ஐம்பத்தாறு; பதினைந்தாவதற்கு அறுபது; பதினாறாவதற்கு அறுபத்து நாலு; பதினேழாவதற்கு அறுபத்தெட்டு; பதினெட்டாவதற்கு எழுபத்திரண்டு; பத்தொன்பதாவதற்கு எழுபத்தாறு; இருபதாவதற்கு எண்பது; இருபத் தொன்றாவதற்கு எண்பத்து நாலு; இருபத்திரண்டாவதற்கு எண்பத்தெட்டு; இருபத்து மூன்றாவதற்குத் தொண்ணூற்றிரண்டு; இருபத்து நான்காவதற்குத் தொண்ணூற்றாறு; இருபத்தைந்தாவதற்கு நூறு; இருபத்தாறாவதற்கு நூற்றுநாலு.

     இனி, அளவழிச் சந்தங்கட்குப் பெயர் சொல்லுமாறு:

     அளவழிச் சந்தங்களிற் சீர் ஒத்து ஓர் அடியுள் ஓர் எழுத்துக் குறைந்து வந்ததனை ‘நிசாத்து’ என்றும், இரண்டெழுத்துக் குறைந்து வந்ததனை ‘விராட்டு’ என்றும், ஓரெழுத்து மிக்கு வந்ததனைப் ‘புரிக்கு’ என்றும், இரண்டெழுத்து மிக்கு வந்ததனைச் ‘சுராட்டு’ என்றும் முதலடியும் நான்காமடியும் சீர் ஒத்து ஓர் எழுத்துக் குறைந்து நடு இரண்டடியும் சீர் ஒத்து ஓர் எழுத்து மிக்கதனை ‘யவமத்திமம்’ என்றும் ‘தோரையிடைச் செய்யுள்’ என்றும்; இடை இரண்டடியும் குறைந்ததனைப் ‘பிபீலிகா மத்திமம்’ என்றும், ‘எறுப்பிடைச் செய்யுள்’ என்றும்; முதலிரண்டடியும் ஒத்துக் கடையிரண்டடியும் எழுத்துமிக்கு வருவனவற்றையும், முதலிரண்டடியும் தம்முள் ஒத்து எழுத்து மிக்குக் கடையிரண்டடியும் ஒப்ப எழுத்துக் குறைந்து