பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           567

     சக்கரத்திற்கும் திரிபாகிக்கும் எழுத்து எண்ணுகின்றுழி எல்லா எழுத்தும் கொள்ளப்படும்; அடிக்கு எழுத்து எண்ணுமாறு போலக் குற்றிகரக் குற்றுகரங்களும் ஒற்றும் ஆய்தமும் ஒழித்து எண்ணப்படா. திரிபாகிக்கும் அத்தொடக்கத்தன கொள்க. சக்கரத்திற்குக் காட்டின பாட்டுள்ளும் கண்டு கொள்க.

     இதனுட் ‘சக்கரம்’ என்றதனானே, பூமி்ச் சக்கரமும், ஆகாயச் சக்கரமும், பூமியாகாயச் சக்கரமும், வட்டச் சக்கரமும், புருடச் சக்கரமும், சதுரச் சக்கரமும், கூர்மச் சக்கரமும், மந்தரச் சக்கரமும், காடகச் சக்கரமும், கலிபுருடச் சக்கரமும், சலாபச் சக்கரமும், சக்கரச் சக்கரமும், அரவுச் சக்கரமும் முதலாகவுடையன புணர்ப்பாவையுள்ளும், போக்கியத் துள்ளும், கிரணியத்துள்ளும், வதுவிச்சையுள்ளும் கண்டு கொள்க.

     அவையெல்லாம் சாவவும் கெடவும் பாடுதற்கும், மனத்தது பாடுதற்கும் பற்றாம் என்று கொள்க.

     சுழிகுளமாவது, எட்டெழுத்தாய் நான்குவரியும் முற்றுப் பெற்ற பாட்டு, முதலும் ஈறும் கழித்து வாசித்தாலும் அப்பாட்டே ஆவது.

     வரலாறு :

[வஞ்சித்துறை]

     ‘அதிகமல மாகாவே
     திண்ணிற மேர்போகா
     கணிநீங்கு மார்மா
     மறங்குவகு மேல.’

 எனவும்,

     ‘கதமிகு வன்கோளி
     தன்குன் றீவாற்கோ
     மிகுதிற மாநீவான
     குன்றதன் மாறீவ.’

 எனவும்,