|
‘செவ்விய உரிப்பொருட் கேது வாகவே
எவ்வகை இறைச்சியும் இயற்றுப தெரிந்தே.’
‘ஒருவன் பெயர்மலை யாறுநா டூரிவை
வரினாண் டுலகியல் வழக்கந் தோற்றல்.’
ஐந்திணை தழுவிய அகமெனப் படுவது
கந்தருவ நெறிமையிற் களவொடு கற்பே.’
இவற்றைப் பதம் நெகிழ்த்து உரைத்துக்கொள்க.
இன்னும் அவ்விதப்பான் உயர்திணையும் அஃறிணையும் ஆமாறு
உரைத்தும்:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே;
அஃறிணை என்மனார் அவரல பிறவே;
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே.’1
எனவும்,
‘மக்கட் சுட்டே உயர்திணை யாகும்.’
எனவும்,
‘தேவரும் நரகரும் மேவவும் பெறுமே.’
எனவும்,
‘ஏவிய இம்மூன் றன்றி ஒழிந்தவை
யாவகைப் பொருளும் அஃறிணை யாகும்.’
எனவும் கொள்க.
இனி, ஒரு சாரார், ‘அகத்திணை, புறத்திணை, அகப்புறத்திணை என
மூன்றாய் அடங்கும்,’ என்ப. ஆமாறு அவிநயத்துட் காண்க.
இனி, இருதுவாவன:
‘காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிள வேனில் வேனில் என்றாங்
கிருமூ வகைய பருவம்; அவைதாம்
ஆவணி முதலா இவ்விரண் டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே.’
இந்த இருது வருணனை அணியியலுட் காண்க.
1. தொல். சொல். கிளவி. 1.
|